கடவுச்சீட்டுக்கு நிலவும் தட்டுப்பாடு 2 மாதங்களில் நீக்க நடவடிக்கை…

கடவுச்சீட்டுக்கு நிலைவிவரும் தட்டுப்பாடு இரண்டு மாதங்களில் நீக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் 10 இலட்சம் கடவுச்சீட்டை புதிதாக பெற்றுக்கொள்ளும் கோரிக்கைக்காக அனுமதிக்கான பரிந்துரையை உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் எஸ்பி நாவின்ன அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இதற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாடுகளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கடவுச்சீட்டுக்கள் கிடைக்கும் வரையில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்கள் அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்களாக பயன்படுத்தப்பட்டுவருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.