(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழப்பு.
எனவே, வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.