முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தமது கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சிகிச்சை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்று திரும்பிய அவர் நேற்று(03) தமது கடவுச்சீட்டை கொழும்பு பிரதான நீதிமன்றில் ஒப்படைத்தார்
தமது சொத்துக்களை வெளியிட மறுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வாஸ் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்று வர நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஐந்து நாள் சிங்கப்பூர் விஜயம் முடிவடைந்த நிலையில் அவரின் கடவுச்சீட்டு நேற்று மன்றில் ஒப்படைக்கப்பட்டது
இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிவான் டிசம்பர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.