(FASTNEWS|COLOMBO) – கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹர நடைபெறும் தினங்களில் பி.ப 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் கடுகண்ணாவையில் இருந்து கண்டி நோக்கி வரும் வீதியின் வலது பக்கத்தில் எந்தவொரு வாகனமும் நிறுத்தி வைக்க முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மீண்டும் இரவு 7.00 மணி தொடக்கம் அதிகாலை 1.00 மணி வரை கண்டியில் இருந்து கடுகண்ணாவ நோக்கி செல்லும் வீதியின் வலது பக்கத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.