கடுகதி ரயிலில் விபத்து ஒரு உயிர் இழப்பு

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த இரவு நேர கடுகதி ரயிலில் மோதுணடு ஒரு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவெடிவேம்பு பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் நேற்றிரவு இடம்பெற்றது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மாவெடிவேம்பு நாமகள் வீதியைச் சேர்ந்த 24 வயதான செல்வம் மகேந்திரராஜா என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.