முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தொடர்பில் அமெரிக்க அதிகாரி ஒருவர் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர், மெக்சிக்கோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே மஹிந்தவின் ஆட்சி தொடர்பில் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் 2015ம் ஆண்டு ஜனவரியில் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் புதிய அத்தியாயத்தை தொடங்கியது என்று சமந்தா குறிப்பிட்டார்.
இன்னும் மஹிந்தவின் ஆட்சியில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். மனித உரிமை காப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும் தற்போது இலங்கை மக்கள் அதிகபட்ச சுதந்திரத்தை அனுபவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாடமாகக்கொண்டு புதிய அரசாங்க ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் சமந்தா பவர் கேட்டுக்கொண்டார்.