அமெரிக்காவில் நிலவும் கடும் குளிருடனான வானிலையால், மேற்கு மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலேயே இவ்வாறு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ட்டிக் வானிலையின் காரணமாக அமெரிக்காவில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, கடுங்குளிரால், அமெரிக்காவில் சுமார் 2500 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை மைனஸ் 40 பாகை செல்சியஸ் வரை காணப்படும் என அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.