(FASTNEWS|COLOMBO) – கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளமையினால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3 நாட்களில் மட்டும் மழைக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களை சேர்ந்த 1142 பேர் தஞ்சமடைந்து உள்ளனர். மழைக்கு 36 வீடுகள் இடிந்து உள்ளன. பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலம் முழுவதும் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கடும் மழை பெய்யக் கூடும் எனவும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.