நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்றும்(24) தொடருவதோடு, பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேல்மாகாணம், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100-150mm வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பிலும் கடுமையான மழைபெய்வதோடு, பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

