நாடளாவிய ரீதியில் கடும் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை இன்றும்(22) பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குறித்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அதிக காற்றும் வீசக் கூடும் நிலை காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மணிக்கு 50Km வேகத்திலும் காற்று வீசும் என தெரிவிக்கின்றது.
தெற்கு,தென்கிழக்கு, வட மேற்கு போன்ற கடற் பிரதேசங்களில் மணிக்கு 60Km முதல் 70Km வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் வெயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.