கடும் வெயில் காரணமாக 14 பேர் உயிரிழப்பு…

ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பலர் தங்கள் வீடு, உறவுகளை இழந்து தவித்து வருவதுடன், வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஜப்பான் இராணுவத்துடன் மக்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஜப்பானின் பல்வேறு நகரங்களில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.