கடுவலை தொடக்கம் கோட்டை வரையான இலகு புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவத்துள்ளார்.
இலகு புகையிரத சேவைக்காக ஜப்பான் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த புகையிரத சேவை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் இறுதியில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.