கடுவலை தொடக்கம் பியகமவிற்கு பிரவேசிக்கும் வீதியின் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுவலை – பியகம வீதியின் களனி கங்கையின் ஊடாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெலி பாலம்’ இன்று(29) அகற்றப்படவுள்ளமையால் இன்று இரவு 7 மணி முதல் நாளை(30) காலை 6 மணிவரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
எனினும், அதிவேக வீதியின் ஊடாக கடுவெலயில் இருந்து பியமகவிற்கு பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.