ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை, ஊடகங்களின் முன்னால் தீக்கிரையாக்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள கூட்டு எதிர்க் கட்சிகளின் அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் எந்தவொரு ஸ்ரீ.சு.க. உறுப்பினரும் கலந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்து கட்சி செயலாளர் சகல உள்ளூராட்சி, மாகாண சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
சில உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி, அக்கடிதங்களை ஊடகங்களின் முன்னால் நேற்று தீயிட்டு எரித்தனர். இது குறித்து ஐ.ம.சு.மு. செயலாளரிடம் வினவியதற்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.