கட்சித் தலைமையை ஏற்குமாறு சஜித்திடம் வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் குழுவுடன் நேற்று (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் கட்சியின் தலைமையில் மாற்றம் தேவை என்றும், செயற்குழு அதை அறிவிக்கும் என தெரிவித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க பதவி விலகியிருந்தார்.

மேலும், இது குறித்து சரியான நேரத்தில் பேசுவேன் என்றும், அரசியலமைப்பின் படி 2015யில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என அசோகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.