பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு இன்று…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இன்று(30) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைக் கருத்திற்கொண்டு அது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(30) காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அனைத்துக் கட்சிகளதும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.