நாளைய விவாதத்திற்கு ஆயத்தமாக இன்று கூடுகிறது…

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டமொன்று இன்று(09) மாலை இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும் சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் விவாதம் மேற்கொள்ள பாராளுமன்றத்தை முன்னதாகவே கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஜே.வி.பி என்பன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன.

பிணைமுறி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்க விஷேட பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒன்று நாளை(10) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.