கட்சி அரசியல் கைவிடப்பட வேண்டும்: துமிந்த திசாநாயக்க வலியுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதாயின் கட்சி அரசியல் கைவிடப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,

“எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவருவது குறித்தே கவனம் செலுத்துகின்றார்கள். அதற்காகவே பாடுபடுகின்றார்கள். அவர்களுக்கு நாட்டின் முன்னேற்றம் குறித்த அக்கறையில்லை.

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

கட்சித் தலைவர்களுக்கு இந்த விடயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவர்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு,நாடாளுமன்றத்தின் இளம் அரசியல்வாதிகள் ஒன்று பட்டு ஓரணியில் நிற்க வேண்டும்.

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். இதைச் செய்யாத காரணத்தினால் தான் பொதுமக்கள் இன்று சகல அரசியல்வாதிகளையும் புறக்கணிக்கும் முடிவில் இருக்கின்றார்கள்.

எனவே இனியாவது இந்த நிலைமையை மாற்ற கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.