ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை எதிர்வரும் தினங்களில் கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜராவதற்கு அழைக்கப்படவுள்ளனர்.
அதன்போது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமாக விளக்கமளிக்க சந்தர்ப்பம் இருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர்களில் ஒருவர் மாத்திரம் இதுவரை விளக்கம் அளித்திருப்பதாக பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இது தவிர எதிர்வரும் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.