கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் இலங்கைக்கு பாதிப்புகள் இல்லை – ரவி..

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் இலங்கைக்கு நேரடி பாதிப்புகள் எதுவும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா உட்பட 5 நாடுகள் தம்முடனான தொடர்பினை துண்டிப்பதையிட்டு கவலையடைவதாக கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டாரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில் புரிந்து வருகின்ற நிலையில், குறித்த நெருக்கடி நிலையினால், தமது பிரஜைகளுக்கோ அல்லது அங்கு தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென கட்டார் அரசு மேலும் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் சக்தி வாய்ந்த 04 நாடுகள் கட்டார் நாட்டினை புறக்கணிப்பதாக அறிவிப்பு..

 

(rizmira)