இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டார் – இலங்கை விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு சந்திப்பில் கலந்து கொண்டார்.
இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் இலங்கை முதலீட்டுச்சபை, சுற்றுலா சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் விரிவாக விளக்கியதுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் வசன்த சேனாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
இதேவேளை, டோஹா நகரில் நடைபெற்ற கட்டார் வர்த்தக சங்கமும் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் இரு நாடுகளையும் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்குபற்றினர்.
மேலும், இந்த சந்திப்பில் கட்டார் நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.