கட்டார் நாட்டின் ரியால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிராகரிப்பு..

கட்டாரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் நாணயங்களை மாற்றீடு செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்றித்தர மறுக்கின்றமையே இதற்குக் காரணம் என, பயணிகள் முறையிட்டுள்ளதாக, விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில முக்கிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளதாக நேற்று(05) தெரிவித்திருந்தது.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எமிரேட், பிளை துபாய், எதிஹாத் எயார்லைன்ஸ் ஆகியன அறிவித்தமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)