கட்டார் மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் – சவுதி மற்றும் அதன் கூட்டணி அறிவிப்பு..

பயங்கரவாதத்தை சமாளிப்பது தொடர்பில் அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் போதுமானதொன்றாக அமையாது என்றும் கட்டார் மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் சவுதி அரேபியாவும் அதன் கூட்டணியும் அறிவித்துள்ளது.

அமெரிக்கா- கட்டார் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சவுதி அரேபியா வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டார் அதிகாரிகளை நம்ப முடியாது என்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கவனமாக கண்காணிக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(rizmira)