கட்டுகுருந்த படகு விபத்து தொடர்பில் குறித்த படகினை செலுத்திய நபர் விளக்கமறியலில்…

16 பேர் பலியாக காரணமான, விபத்துக்குள்ளான களுத்துறை கட்டுக்குறுந்த படகின் படகோட்டி கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

————————————– UPDATE 09:00

களுத்துறை , கட்டுகுருந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பில் குறித்த படகினை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் பின்னர் அவர் களுத்துறை நாகொடை மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.