சீனாவில் தாக்கம் செலுத்தியுள்ள சூறாவளி காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனா நோக்கி பயணிக்கவிருந்த விமானம் நேற்று(16) இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று(17) அதிகாலை மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தாமதமடைந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 880 விமானம் இன்று(17) அதிகாலை சீனாவின் கென்டன் நகருக்கு புறப்பட்டது.
இந்நிலையில், தற்போது விமான சேவைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நிலவிய சூறாவளி நிலைமையை கருத்திற்கொண்டு, சீனாவின் குவன்ஸூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.