கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் ஒரு கட்டமாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விமானநிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு ஜப்பான் நாட்டின் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்நாட்டு பிரதமர் சின்சோ அபே ஆகியோர் முன்னிலையில் இது தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.