கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய செயற்பாட்டு நடவடிக்கைகளானது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக கோப் குழுவிடம் முறைப்பாடு செய்ய ஸ்ரீலங்கா விமான சேவை தொழிற்சங்க அமைப்பு முடிவு செய்துள்ளது.
குறித்த பகிர்ந்தளிப்பு விடயமானது அரசின் பொருளாதார துணைக்குழு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு அந்த குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா விமான சேவைகள் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு இடையில் 2011 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய 2021ஆம் ஆண்டு வரை விமான நிலையத்தின் ஏகபோக உரிமையானது ஸ்ரீலங்கா விமான சேவைக்கு உரித்துடையாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோப் குழுவிடம் இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முறைப்பாடு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.