கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் மத்தலையில் தரையிறக்கம்…

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் இன்று(16) அதிகாலை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் மற்றும் மும்பாயிலிருந்து வந்த இரண்டு விமானங்களே இன்று அதிகாலை இவ்வாறு மத்தலை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்ப்டுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விமானங்கள் இரண்டும் காலை 7 மணிக்கு பின்னர் மத்தலை விமான நிலையத்திலிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.