கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.