கட்டுப்பாட்டை மீறிய சிங்கப்பூர் எயார்லைன் எயார்பஸ் A330-300

180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன் எயார்பஸ் A330-300 எனும் விமானமானது, தனது பலகையிலிருந்து தற்காலிகமாக தன் இரு எஞ்சின்களினதும் சக்தியினை இழந்து புயலில் சிக்கி விபத்துக்குள்ளாகியதாக சிங்கப்பூர் எயார்லைன் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

SQ836 தடத்தில் இயங்கும் இவிமானமானது சிங்கப்பூரிலிருந்து சனிக்கிழமை ஷாங்காய் நோக்கிப்பயணித்தது.

மேலும் தெரிவிக்கையில், இவ்விமானமானது புறப்பட்டு 3 1/2 மணி நேரத்திற்குப் பின் சுமாராக 39,000 அடி உயரத்தில் சீரற்ற காலநிலையினை எதிர்கொண்டதால் ஏற்பட்ட விபத்தென்றும் தெரிவித்திருந்தார்.