அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவிக்க இலங்கை அணியினருக்கு நேற்று(24) வாய்ப்புக் கிட்டியது.
ஆம், அது ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெறுகின்ற போட்டியிலாகும்.
இருதரப்பினருக்கும் இடையில் மோதவுள்ள 5 போட்டிகளில் இது 2வது போட்டியாகும்.
இலங்கை அணி 48.5ஓவர்களில் 288ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது.
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் போக்னர் 3விக்கட்களை கைப்பற்றி (hat-trick) சாதனை படைத்தார்.
குறித்த விக்கெட்கள் 3ம் கைப்பற்றப்பட்டதாவது;
45வது ஓவரில் 6ம் பந்தில் குசல் ஜனித், 47ம் ஓவரில் முதல் பந்தில் மேத்யூஸ் மற்றும் 47ம் ஓவரில் 2ம் பந்தில் திசர பெரேரா ஆகியோரை வீழ்த்தியேயாகும்.
குசல் மென்டிஸ் – 69, ஏஞ்சலோ மேத்யூஸ் – 57 மற்றும் 7வது ஆட்டக்காரராக குசல் ஜனித் பெரேரா – 54.