கண்டி சம்பவம் காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(12) மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத நாட்களுக்கு பதிலாக வேறு தினங்களில் கற்றல் செயற்பாடுகளை நடத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது மாவட்டத்தில் சுமூகமான நிலைமை காணப்படுவதால் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.