சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக அவசர கால சட்டம் பிரயோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் கண்டி மாவட்டத்திற்கு மறு அறிவித்தல் வரும் வரையில் 3G மற்றும் 4G இணைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போலி பிரச்சார மற்றும் இனவாத பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களும் கைது செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் மற்றும் மெசென்ஜர்களில் போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இனவாதம் அல்லது போலி பிரச்சாரங்களை வெளியிட்டமை உறுதி செய்யப்பட்டால் அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
#rizma