கண்டியில் பலவந்தமாக பாலியல் வல்லுறவு

கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நிர்வாக உதவியாளராக பணி புரியும் 35 வயதுடைய பெண்ணொருவர் பலவந்தமாக கடத்திச்செல்லப்பட்டு இனந்தெரியாத கும்பலால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பலவந்தமாக அழைத்துத்சென்று கொடூரமான முறையில் அவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தனது தோழி வரும் வரை கடந்த 12ம் திகதி கண்டி தென்னகுபுர பாலத்திற்கு அருகே நின்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபர்கள் அவரை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

அந்த கும்பலில் 4 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் தெரிவித்ததை அடுத்து குறித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அப்பெண்ணிடம் இருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கப்பொருட்களையும் சந்தேக நபர்கள் திருடிச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கண்டி காவற்துறையினர் விசாரணைகனை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை