கொழும்பு – கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு ஒப்பந்தக்காரர்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான இரண்டாம் கட்ட வீதி நிர்மாணிப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களினால் அதிவேக வீதி நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த அதிவேக வீதியின் முதலாவது கட்டுமானப் பணிகளை சீன நிறுவனம் ஒன்று ஆரம்பித்துள்ளது.
இதேவேளை கண்டி – கொழும்பு அதிவேக வீதி நிர்மாணத்திற்கான தேவையான காணிகளை தனியாரிடமிருந்து அரசாங்கம் கையேற்றுள்ளதாகவும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.