கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும் பணி இன்று ஆரம்பம்…

கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும் எனவும், இதுதொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் .பத்தரமுல்ல ‘அபே-கம’ வளாகத்தில் இன்று(06) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதற்கு மத்திய கலாசார நிதியம் நிதி வழங்கி தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.