கண்டி, கொஹாகொடா குப்பை மேட்டில் எரிவாயு அச்சுறுத்தல்..

கண்டி, கொஹாகொடா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேட்டில் எரிவாயு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ட்ரோன் கமரா பயன்படுத்தி பேராதனை பல்கலைக்கழகத்தின் நிபுணர்களின் உதவியுடன், இன்று(02) பரிசோதிக்கப்படவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர பைசர் முஸ்தபாவினால் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எரிவாயு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை அடுத்து உடனடியாக ட்ரோன் கமரா பயன்படுத்தி குறித்த இந்த குப்பை மேட்டினை ஆய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

இந்த ஆய்வில் கிடைக்கும் தகவல் தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி மத்திய மாகாண பிரதான அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு மேலும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

(rizmira)