கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ள கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கான, பாதுகாப்பு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பொஸிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

அதன்படி, கும்பல் பெரஹர ஆகஸ்ட் மாதம் 05 – 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. றன்தோலி பெரஹர ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 15ம் திகதி பிற்பகல் இடம்பெறும் பெரஹரவை அடுத்து தலதா மாளிகை பெரஹர வைபவம் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.