கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் திகன தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
குறித்த சம்பவத்தின் காரணமாக உயிரிழந்த மூவருக்காக நபர் ஒருவருக்கு 5 இலட்சம் வீதம் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவருக்காக அரச வைத்திய அறிக்கையின் அடிப்படையில் ஆகக்கூடியது 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு உட்பட்டதாக இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் வழங்கிய ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.