பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கண்டி பன்முக போக்குவரத்துக் கட்டமைப்பொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் அழுத்தத்திற்கு உள்ளாகும் ரயில் திணைக்களத்தின் கட்டடத் தொகுதியை மறுசீரமைப்பதற்காக, 4 மாடிகள், 5 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடத் தொகுதிகளும் அமைக்கப்படவுள்ளதோடு, ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களுக்காக வாகனத் தரிப்பிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இவற்றுக்காக 1,460 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இவ்வாறு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
R.Rishma