கண்டி பெரஹரவுக்கு பயங்கரவாத தாக்குதல் அவதானம்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

(FASTGOSSIP | COLOMBO) – நாளைய தினம்(02) கண்டி, எசல பெரஹர இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பை பலப்படுத்தப்படும் வகையில் விசேட பாதுகாப்பு திட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

பெரஹர நிகழ்வின் போது சில அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கண்டி எசல பெரஹரவினை பார்வையிட பாரிய மக்கள் தொகை திரண்டு வரும் என்றும், ஒவ்வொருவராக பரிசோதிப்பது சாத்தியமானதல்ல என தெரிவித்திருந்த அமைச்சர், அதனால் கண்டி பெரஹரவினை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்வதாயின் பயங்கரவாதிகளுக்கு அது மிகவும் இலேசான காரியம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து சங்கத்தினரிடம் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.