கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள பௌத்த மத்திய நிலையம் ஒன்றுக்கு இனம் தெரியாத சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறி பிரதேசவாசிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.