கண்டி மாவட்டத்தில் மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களது பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும், இன்று(27) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கண்டி மாவட்ட சுகாதார பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(26) முதல் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(27) இதுகுறித்து அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பதிவு மற்றும் உதவி மருத்துவ அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-Rishma