கண்டி முதல் எல்ல வரை குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை…

உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி, வார இறுதி நாட்களில் கண்டியில் இருந்து எல்ல புகையிரத நிலையம் வரையில் குளிரூட்டப்பட்ட ஐந்து பெட்டிகளைக் கொண்ட சொகுசு புகையிரத சேவையொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சேவை நேற்று(03) முதல் இடம்பெறுகிறது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம், கண்டியிலிருந்து காலை 7.40 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், பிற்பகல் 1.28 க்கு எல்லயை வந்தடையும்.

மீண்டும், எல்லயிலிருந்து பிற்பகல் 2.15 க்கு பயணிக்கும் ரயில், இரவு 8.05 அளவில் கண்டியை வந்தடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இந்த சேவையில், முன்கூட்டியே ஆசனங்களை பதிவு செய்து, பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.