(FASTNEWS| COLOMBO) – கண்டி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்ற ஐவரையும் எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மெனிக்கின்ன தம்பராம, கிரிமெட்டிய, பில்லவெள ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவர் கடந்த 14ம் திகதி மெனிக்கின்ன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றபோது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.