கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வீடொன்றில் இருந்து 03 சடலங்கள் மீட்பு..

கண்டி – மெனிக்ஹின்ன, ரஜவெல 02, ரம்படவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் அறையில் தீப்பற்றியதில், மூவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தந்தை(36), மகள்(13) மற்றும் மகன்(05) ஆகியோரே இவ்வாறே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதோடு, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

#Rishma