(FASTNEWS-COLOMBO) கண்டி பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு இன்று (25)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியத்தின் மூலம் சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு ஏழு மாடி கட்டட நிர்மாணப் பணிகளுக்காக 628 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த பிரிவில் இரத்த மாற்று சிகிச்சை பிரிவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறுநீரக சிகிச்சை முகாம் சேவைகளும் உள்ளடங்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.