அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ நடைபெற்றது. இதில் பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சிறிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு எலக்ட்ரானிக் டிஸ்பிளே வழியாக பார்க்கும் புதிய தொழிநுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வழக்கமான, கன்வென்ஷனல் கண்ணாடிகளை பொறுத்தவரை டிரைவர் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டும் என்றால் அவர் வலது மற்றும் இடது பக்க கண்ணாடிகளை திரும்பி பார்த்தால் மட்டுமே முடியும். ஆனால், இந்த புதிய எலக்ட்ரானிக் கேமிரா தொழில்நுட்பம் வாயிலாக டிரைவர் தலையை திருப்பாமலேயே நேரடியாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் குறையும்