கண் அழுத்த நோயை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாதயாத்திரை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது.
சர்வதேச கண் அழுத்த வாரத்தை முன்னிட்டு, தேசிய கண் வைத்தியசாலையினால் விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகிய இந்த பேரணி, தேசிய கண் வைத்தியசாலை வரை சென்று நிறைவுற்றது.
மேலும், சுகாதாரத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிம் உட்பட சுகாதாரத்துறை சார்ந்த பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.


