கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்வரும் 15ம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஊழியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு போன்றவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரக் கோரிக்கை விடுத்து இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இன்று(14) தொடக்கம் கதிர்வீச்சு (எக்ஸ்ரே) தொழில் நுட்பவியலாளர்கள் மருத்துவமனைகளின் வார்ட்டுகளில் தங்கியுள்ள நோயாளிகளுக்கான எக்ஸ்ரே செயற்பாடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என மேலும் அறிவித்துள்ளனர்.

 

#rishma